Janu / 2025 மே 26 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞன் ஒருவன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் வெள்ளிக்கிழமை(23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 26 வயது மதிக்கத்தக்க 2 பிள்ளைகளின் தந்தையான மருதமுனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவரிடமிருந்து 710 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப் பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்

5 minute ago
10 minute ago
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
47 minute ago
59 minute ago