Editorial / 2025 டிசெம்பர் 19 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய சந்தேக நபரை வியாழக்கிழமை (18) அன்று மாலை கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை பௌஸ் மாவத்தை வீதியில் மலையார் வீதிக்கு திரும்பும் சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைதானார்.
கைதானவர் 34 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் என்பதுடன் கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 1 கிராமுக்கு அதிகமான ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இக்கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகேவின் தலைமையில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .