2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Janu   / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடொன்றில் ஐஸ் போதைப் பொருட்களை, விற்பனை செய்வதற்காக பொதி செய்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த சம்மாந்துறை  பொலிஸார் இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்   பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது  3 கிராம் 154 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 18 மற்றும் 34 வயதுடைய இரு நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  சட்ட நடவடிக்கைகாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாறுக் ஷிஹான் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X