2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

கசிப்புடன் இருவர் கைது

Janu   / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றோர வயல்வெளியில் ஞாயிற்றுக்கிழமை(7) முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்முனை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது சுமார் 23 மற்றும் 26 வயதுடைய வீரமுனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களை  40 000 மில்லி லிட்டர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.

கைதான இச் சந்தேக நபர்கள் உட்பட சான்றுப் பொருட்கள் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X