Janu / 2025 நவம்பர் 06 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, மாவடிவேம்பு பகுதியில் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்
சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் 15 க்கு மேற்பட்ட பொலிஸார் இனைந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களை தேடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இதன்போது மாவடிவேம்பு பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் வறள் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்ட 40 லிட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வீட்டின் உரிமையாளர்களான ஆண் , பெண் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இடத்திற்கு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன் வருகை தந்து சட்டவிரோத கசிப்பு விற்பனை செய்யும் இடங்களை அடையாளப்படுத்தியதுடன். குறித்த இடங்களில் சோதனை செய்யப்பட்டு கசிப்பு விற்பனை இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தியினால் மாவடிவேம்பு பகுதியில் உள்ள மக்கள் மற்றும் குடும்பங்கள், பாடசாலை பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
கசிப்பு தொடர்பான பிரச்சினை இருக்கும் இடங்களுக்கு ஏறாவூர்பற்று பிரதேச சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரனின் வேண்டுகோளுக்கினங்க இரண்டு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேவேளை சித்தாண்டி சமூக செயற்பாட்டு இளைஞர்களும் குறித்த கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பொலிஸாருடன் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .