Freelancer / 2023 நவம்பர் 08 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் கடலரிப்பின் காரணமாக இப்பகுதிகளில் பல்வேறான பாதிப்புக்கள் இடம்பெற்று வருவதுடன் பெரும் நிலப்பரப்பு கடலரிப்பிற்குள்ளாகி வருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்படைந்து வருவதுடன், கரையோரப் போக்குவரத்து வீதிகள், தென்னந் தோப்புக்கள், மீனவ வாடிகள் போன்றன அழிவடைந்து வருவதுடன், படகு முதலான கடற்றொழில் உபகரணங்களும் சேதமைடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கடலரிப்பினால் தம்பிலுவில் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஸ்தாபகர் அமரர் தம்பையா சுவாமிகளின் சமாதி ஆலயம் சேதமடைந்துள்ளது. அத்தோடு திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மீனவர் கட்டடமொன்றும் வெகுவாக சேதமடைந்துள்ளது.
கடலலையின் தாக்கத்தின் காரணமாக பல ஏக்கர் நிலப்பரப்பு கடலால் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன், பல கிணறுகளும் மீனவ வாடிகளும் சேதடைந்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
4 minute ago
11 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
1 hours ago
2 hours ago