2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் அமைதிவழி ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள்  செயல்முனையின் 3 வது வருடம் நிறைவையொட்டி கல்முனை மாநகரில் புதன்கிழமை (6) காலை அமைதி வழி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீள பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மக்கள்  பதாதைகளை ஏந்தி   அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் குறித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் ஊடக வெளியீடு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .