Freelancer / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை குறித்து ஆராயும் முகமாக நேற்றைய தினம்(3) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன் போது கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட 96 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் 18 வருங்களாக முறையான வடிகான் இன்மையால் சமையலறைக் கழிவுநீர் குளியலறைக் கழிவுநீர் மற்றும் மலசலகூட கழிவுகள் போன்றவை வீட்டுத்திட்டத்தின் பின்புறங்களில் தேங்கிநின்று பாரிய அளவிலான நுளம்புகளைப் பெருக்கி நோய்களை ஏற்படுவதை நிரந்திரமாக தடுத்து ஒரு பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த களவிஜயத்தின் போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் , அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், கல்முனை பிரதேச செயலாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பிரசன்னமாக இருந்தனர்.
பாறுக் ஷிஹான்




15 minute ago
41 minute ago
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
42 minute ago
53 minute ago