Freelancer / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரதேசத்தில் வீடு ஒன்றினுள் புகுந்த இனந்தெரியாத நபர் வீட்டினுள் தனியாக இருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தை வெட்டி அவரின் கழுத்தில் இருந்த 10 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் இன்று காலை(02) இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில்: தனிமையில் இருந்த பெண்ணிடம் உரையாடிய நிலையிலேயே கழுத்தை கத்தியால் வெட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் எனவும், வயோதிப பெண் சத்தமிட்டதையடுத்து அயலவர்கள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago