Freelancer / 2023 ஒக்டோபர் 04 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், எம்.சி.அன்சார், வி.ரி. சகாதேவராஜா
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் நேற்றைய தினம்(03) செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் இரவு வேளை பயணம் செய்த பெண் ஒருவரே காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் இறக்காமம் பகுதி 9 ஆம் பிரிவைச் சேர்ந்த 43 வயதுடைய புஹாரி சரீப் சிபானி என்ற 3 பிள்ளைகளின் தாயாவார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 minute ago
44 minute ago
45 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
44 minute ago
45 minute ago
56 minute ago