Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 19 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி மத்திய கல்லூரியில் 2024 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் செவ்வாய்க்கிழமை(18) தமிழ் பாட பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பரீட்சை மண்டபத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தை மட்டுப்படுத்தி ஒரு மணித்தியாலமும் நாற்பது நிமிடங்கள் கால அவகாசம் இருந்தும் அவை மறுக்கப்பட்டு விடைத்தாள்களை பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய மேற்பார்வையாளர்களால் பெறப்பட்டுள்ளது. இதனால் மாணவர் முழுமையாக பரீட்சை வினாக்களுக்கு விடையளிக்க தவறியுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளதாக பரீட்சை எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் இரண்டு பரீட்சை மண்டபங்களில் பரீட்சைகள் நடைபெற்ற போதிலும் ஒரு மண்டபத்திலே இவ்வாறு அநீதி இடம்பெற்றுள்ளது.
கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (18) மாலைநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தனர்.
காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் தமிழ் பாடம் வினாத்தாள் பகுதி 1 பகுதி 2 ஆகிய வினாத்தாள்களுக்கு விடை எழுதிக் கொண்டிருந்த போது ஒன்றரை மணித்தியாலங்களுக்கு முன்னரே பகுதி ஒன்று விடை த்தாளை கேட்டு அவசரமாக பெற்றுக் கொண்டார். இதனால் மாணவர்கள் இப் பாடத்தில் சிறந்த பெறு பேறு வருமா? என சந்தேகத்திற்கு ஆளாகி உள்ளனர்.
திட்டமிட்டு இந்த நடவடிக்கையை பரீட்சை மேற்பார்வை அதிகாரிகள் மேற் கொண்டுள்ளனர். எனவே அநீதி இழைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நீதி கிடைப்பதுடன் இந்த பாடத்துக்கு முழுப் புள்ளிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தனர் மாணவர்கள் தங்களது புள்ளிகள் மற்றும் பெறுபேறுகள் குறைவடையலாம் என்றும் தமிழ் மொழி பாடமானது மிக முக்கியமானது என்றும் தங்களது எதிர்காலம் இதனால் பாதிப்படையலாம் என்றும் முழுமையாக புள்ளிகளை வழங்குவதன் மூலம் இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெற்றோரும் மாணவர்களும் தெரிவித்தனர்.
எம். எஸ். எம். நூர்தீன்
3 minute ago
15 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
8 hours ago