Editorial / 2025 நவம்பர் 11 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களினால் சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொனிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (11) காலை நிகழ்த்தப்பட்டது.
இதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் ஆகியோரின் உரிமைகள் தொடர்பாக பேசப்பட்டது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நிகழ்த்தப்பட்டு இருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .