2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’கிழக்கு ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வேண்டும்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 13 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹஸ்பர் ஏ ஹலீம், எம்.எஎஸ்.எம்.ஹனீபா, பைஷல் இஸ்மாயில்

 

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றத்தை உடன் அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத்துக்கு, நேற்று  (12) அனுப்பிய கடிதத்திலேயே, அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் கடந்த 2 வருடங்களாக அமல்படுத்தப்படாமல் உள்ளதால், பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இவ்வாண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றப் பட்டியல் வெளியிடப்பட்டு, 2021.04.19ஆம் திகதி முதல், அது நடைமுறைக்கு வரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் மே மாதம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஜூன் மாதம் அமலுக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது. எனினும், இந்த இடமாற்றம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை' எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதுவிடயத்தைக் கவனத்தில் எடுத்து, இவ்வாண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை உடன் அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .