R.Tharaniya / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொண்டுகள்சேனை பூலாக்காடு சீல்லிக்கொடி பகுதியில் உள்ள குழி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை (23) அன்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரிய வேதம் பூலாக்காடு கிரான் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான மூத்த தம்பி சீனித்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (23) அன்று காலை தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள சீல்லிக்கொடி பகுதியில் உள்ள குழி ஒன்றில் மீன்பிடிப்பதற்காக சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை இதையடுத்து அவரை உறவினர்கள் தேடி சென்ற போது அந்த பகுதியில் புதன்கிழமை(24) அன்று காலை யானை தாக்குதலில் பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .
இதையடுத்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய சம்பவ இடத்துக்கு சென்ற கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேலு ரமேஷ் ஆனந்தன், மற்றும் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .