2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

குருக்கள் மடத்தில் பாரிய விபத்து

Janu   / 2025 ஒக்டோபர் 14 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் ஒன்று, குருக்கள்மடம் முருகன் ஆலயத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

காரில் மூன்று பேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் காயங்களுக்குள்ளாகி கலுவாஞ்சி குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.    

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் பகுதியில் அதிகளவான வளைவுகள் காணப்படுவதால், மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 வ.சக்தி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .