2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பை சேர்ந்தவர் தம்பலகாமத்தில் ஐஸூடன் கைது

Janu   / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர், புதன்கிழமை (17) அன்று கைது செய்யப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொழும்பு 12, குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் அவரிடமிருந்து  30 கிராம் 700 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிண்ணியா - தம்பலகாமம் பிரதான வீதியில் பாதை தடை கடவை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த நபரை பரிசோதனை செய்த போதே ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார்  தெரிவித்தனர்.

ஏ.எச். ஹஸ்பர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X