2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

கோடா பரலுடன் ஒருவர் கைது

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு தாந்தாமலை, கண்டியனாறு குளத்தை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒருவர் கைது. தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட  கோடா பரலுடன் சந்தேக நபர் ஒருவரை  கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம்கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை,  கண்டியநாறு பகுதி குளத்தருகில் திங்கட்கிழமை  (08) அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசேட புலனாய்வுபிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் கொக்கட்டிச்சோலைபொலிஸார் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது 1,80,000  மில்லி லிட்டர் ஒரு பரலுடன் 20 வயதுடைய உன்னிச்சை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும் 10 கோடாபரல்களும், 12 வெற்று பரல்களும், கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட விருந்ததாகவும்கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சோதனைநடவடிக்கையின்போது பிரதான பொலிஸ் பரிசோதகரும், நிலைய பொறுப்பதிகாரியுமான அபேரத்னபொலிஸ் தலைமையில்  கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய  பொலிஸ் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைதான சந்தேக நபரையும்,பொருட்களையும் நீதிமன்னிறல் முன்னிலைப் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வ.சக்திவேல்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X