R.Tharaniya / 2025 நவம்பர் 16 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரண்டு படகில் ஒரு படகின் இயந்திரம் ஏற்கனவே பழுதான நிலையில் அந்த படகை கட்டி இழுத்து சென்று கொண்டிருந்த அடுத்த படகும் சவுக்கடி கடற்பிரதேசத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு காற்றில் அடித்து சவுக்கடியில் தரைதட்டியது.
இதன் போது இரண்டு படகிலும் கரை தீவைச் சேர்ந்த ஐந்து பேர்பயணித்துள்ளதுடன் அவர்கள் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் ஒருவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டிருந்த நிலையில் சவுக்கடி மீனவர்களால் நள்ளிரவு மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாருக்கு ஏறாவூர் மீனவர் அமைப்பின் தலைவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டனர்.
விபத்திற்கான காரணம் இயந்திரக் கோளாறு மற்றும் கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் சூழ்ந்திருந்த காலநிலை மாற்றம் என தற்போது வரை அறிய முடிகிறது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago