2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சிறுவர் அபிவிருத்திக்குழு கூட்டம்

Freelancer   / 2023 ஜூலை 06 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில்  மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை  (06) நடைபெற்றது.

இதன்போது மாவட்டத்தின் சிறுவர்களது உரிமைகளை  பாதுகாத்து அவர்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினைப் பெற்றுக் கொடுப்பதில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. 

மேலும் பிரதேச மட்டத்தில் சிறுவர்களின் கல்வி, சுகாதாரம், போசாக்கு மற்றும் பாதுகாப்பு, சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் ஊழியம், போதைவஸ்து, வீதியோர யாசகம் மற்றும் வியாபாரம் உட்பட சிறுவர் அச்சுறுத்தல் தொடர்பான பல விடயங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X