Janu / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை வீதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்பனை முகவர் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எழுவாயு சிலிண்டர்கள் சூட்சமமான முறையில் திருடிய சந்தேக நபரை காத்தான்குடி பொலிஸார் திங்கள்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிவாயு முகவர் நிலையத்தின் பின்புறமாக மதிலின் மேலே ஏறி கைகளினால் குறித்த சந்தேக நபர் 12 எரிவாயு கொள்கலன்களை திருடியுள்ளார்.
திருடிய கொள்கலன்களை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த போது பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அவரிடம் இருந்த 9 சிலிண்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதியான மூன்று சிலிண்டர்களையும் குறித்த சந்தேக நபர் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்

4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago