2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுகாதாரமற்ற உணவங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

R.Tharaniya   / 2025 மார்ச் 12 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தில் இடியாப்பம், பிட்டு. தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்து வரும் உணவுக்கடைகளை மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளிஸ்வரன் ஆலோசனைக்கு அமைய கோட்டைமுனை மற்றும் இருதயபுரம் பொது சுகாதார பரிசோதகர்களான எஸ்.கஜானந்தன், என்.கருணாகரன், ரி.மிதுன்ராஜ். யே. யசேதரன், ரி.பகீரதன் ஆகியோர்  செவ்வாய்க்கிழமை (11) இரவு முற்றுகையிட்டனர்.

சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு மற்றும் மனித பாவனைக்கு ஒவ்வாத உணவுகளை விற்பனை செய்த  13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X