2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

டிப்பர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் 64 ஆம் கட்டை பகுதியில்,மூதூரிலிருந்து திருகோணமலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம்,மாடு குறுக்கறுத்ததன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (7) அன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சாரதி சிறு காயங்களுடன உயிர் தப்பியுள்ளதுடன் மாட்டிற்கும் எந்த ஆபத்து ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X