Janu / 2023 ஜூன் 04 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேசத்தில் டெங்கு அபாயத்தை தடுத்தல் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லல் எனும் கருப்பொருளிலான அவசர கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் பீ. இராஜகுலேந்திரன், நிருவாக கிராம உத்தியோகத்தர், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜெகத், காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் டீ. மோகனகுமார், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.பைசால் முஸ்தபா , கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் உத்தியோகத்தர்,ஆகியோர்கள் பங்குபற்றினர்.
இதன் போது டெங்கு தொடர்பான சமகால நிலவரங்கள் குறித்தும், அவற்றினை கட்டுப் படுத்துவது தொடர்பில் தொடர்புபட்ட நிறுவனங்களின் வகிபாகங்கள் மற்றும் காத்திரமான திட்டங்கள் குறித்தும் தொடர்ச்சியாக டெங்கு அபாயத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள குழுக்களின் செயற்பாடுகளை உயிரோட்டமானதாக்குவதற்கான பொறிமுறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் இனந்தெரியாத நபர்களால் குப்பை கூழங்கள் கொட்டப்படும் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளான தோணாவினை அண்டிய பகுதிகள், பொது இடங்கள், களப்பு வீதிகள் மற்றும் மூடிய பாதைகள் குறித்தும் விஷேட கவனம் செலுத்தப்பட்டதோடு குறித்த இடங்களினை மக்கள் பாவனைக்கு உகந்ததாக மாற்றுவதற்கான சாத்தியமான பொறிமுறைகள் தொடர்பாகவும் முடிவுகள் எட்டப்பட்டன.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025