R.Tharaniya / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடிசை வீடொன்று தீப்பிடித்து சாம்பலாகிய சம்பவம் சனிக்கிழமை (11) அன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் - சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பிள்ளையார் கோயில் வீதியிலுள்ள வீடொன்று இவ்வாறு தீப்பிடித்து சாம்பலாகி உள்ளது.
இந்த சம்பவம் வீட்டில் பயன்படுத்திய எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த தீ சம்பவத்தில் குடிசை வீடும், அங்கிருந்த பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளன.
குறித்த இடத்துக்குச் சென்ற வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான கே.கமலநேசன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025