Editorial / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் தென்னம் தோப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை(13.10.2025) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…..
குருக்கள்மடம் தென்னம் தோப்பில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் உத்தரவுக்கமைய அங்கு விஜயம் செய்த களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்த 81 வயதுடைய கதிர்காமத்தம்பி சோமசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .