2025 ஜூன் 18, புதன்கிழமை

தெ.கி பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தர் தேர்வு

R.Tharaniya   / 2025 மே 28 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டு  திங்கட்கிழமை (26) அன்று பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில்  பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் முன்னிலையில். தனது கடமையை  உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரை பரிந்துரை செய்வதற்காக விசேட பல்கலைக்கழக பேரவை ஒன்று கூடல் கடந்த ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி பேராசிரியர் எம்.எம். பாஸில்  தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்   நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்று நிருபத்தில் கோரப்பட்டுள்ள தான் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரர்களுக்கு ஏழு அளவுகோல்களின்  கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்தனர்.

இதன் அடிப்படையில்  முதலாவது பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனும் இரண்டாவதாக பேராசிரியர் ஏ.எம். றஸ்மியும் மூன்றாவதாக  யூ.எல்.செய்னுடீன் ஆகியோர் புள்ளிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

பரிந்துரைக்கப்பட்ட இருந்த மூவரில் முதலாவதாக தெரிவாகி இருந்த பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீனை ஜனாதிபதி சிபார்சு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக மூன்று முறை பணியாற்றியிருந்தார்.

பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி, பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஹோங்கோங் பல்கலைக்கழகம் போன்றவற்றில் கல்வி கற்ற சிறந்த கல்வி பின்புலத்தையும் நிர்வாகத் திறமையும் கொண்டவராவார்.

நிகழ்வில் பீடாதிபதிகளான  பேராசிரியர் எம்.எம். பாஸில், பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம்,  எம்.எச்.ஏ. முனாஸ்,  எம்.எச். ஹாரூன் பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி உள்ளிட்டவர்களுடன்

பேராசிரியர்களான எம்.ஐ.எம். ஹிலால். ஏ.எல்.எம். றியால், எஸ். சப்றாஸ் நவாஸ் ஆகியோர் பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி யூ.எல். செய்னுடீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.எம். சமீம்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.எம்.ஹனீபா

பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .