2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தோணிகளுக்குள் இருந்த கசிப்பு சிக்கியது

Niroshini   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

 

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில்; விற்பனை  செய்வதற்காக மட்டக்களப்பு -முறக்கொட்டான்சேனை வாவியினுள் தோணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70,000 மில்லி வீற்றர் கசிப்பு, மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது, சந்தேகசபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் பணிப்புரையின் பேரில், இன்று (07) அதிகாலை 1.30 மணியளவில், மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே,  குறித்த கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள், எறாவூர் நீதிமன்றத்தி ஆஜர்படுத்தப்பட உள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .