Janu / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி புதிய காத்தான்குடி அப்ரார் பிரதேசத்தில் திங்கட்கிழமை (07) விஷர் நாய் கடித்ததில் நான்கு பேர் காயமடைந்து , மூன்று பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலும் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய காத்தான்குடியில் வீடொன்றில் வளர்த்து வரும் விஷர் நாயொன்று இவ்வாறு கடித்துள்ளது.இதையடுத்து குறித்த நாயினால் இப் பகுதியில் வசிப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக இப்பகுதி மக்கள் காத்தான்குடி நகர சபை மற்றும் சுகாதார அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். புதிய காத்தான்குடி,அன்வர் மற்றும் அப்றார் பகுதிகளில் விசர் நாய் ஒன்றினால் அப்பகுதியில் அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும்
பிரதேச சுகாதார பணிமனை அதிகாரிகளும், நகர சபையும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
எம் எஸ் எம் நூர்தீன்

7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago