2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் மரணம்

Janu   / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ஆம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (06) இடம் பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தர் அதே  பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய கணபதிப்பிள்ளை காளிராசா என தெரியவந்துள்ளது.

ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்திய நிலையில் ஒரு பட்டாசு வெடிக்காததால் குறித்த நபர் அதை காலால் தடவிய போது பட்டாசு வெடித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏ.எச் ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X