2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

புதையல் தோண்டிய ஐவர் கைது

Janu   / 2024 செப்டெம்பர் 30 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் வெள்ளிக்கிழமை(27) இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி, மட்டக்களப்பு மாவட்டம்  செங்கலடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 28 தொடக்கம் 30 வயது மதிக்கத்தக்கவர்கள் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

வீடொன்றில் புதையல் தோண்டுவதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றிற்கமையவே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , இதன்போது கைது செய்யப்பட ஐவரையும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல். நதீர் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை  சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை(30) வரை   தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் .

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி,அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .