Janu / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாசிக்குடா தனியார் சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் உள்ள தென்னந்தோட்டமொன்றில் தீ பரவிய சம்பவம் புதன்கிழமை (1) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இவ்விடயத்தில் உடனடியாக செயற்பட்ட தவிசாளர் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபையின் தண்ணீர் பவுசர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவை வரவழைத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருந்த போதும் இந்த தீ சம்பவத்தில் பல தென்னை மரங்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான தீப்பரவல் சம்பவங்கள் பலமுறை வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் உதவியை நாடி வருவதாகவும் தவிசாளர் குறிப்பிட்டார்.
வாழைச்சேனை பிரதேசத்துக்கு தீயணைப்பு இந்திரம் மிக முக்கியமாக தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
எச்.எம்.எம்.பர்ஸான்
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago