Janu / 2025 டிசெம்பர் 14 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெருகல் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பிரதேச செயலக வளாகத்தில் சனிக்கிழமை (13) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணத்தை பிரதேச செயலாளர் இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காத நிலையில் இன்னும் சில காரணங்களை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் குறித்த இடத்திற்கு வந்த திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W.G.M ஹேமந்தகுமார வருகைதந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
“அரச உத்தியோகத்தர்கள் வெள்ள நிலைமை ஏற்பட்டதன் பின்னர் சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் மாத்திரமே தூங்குகின்றனர். அவர்கள் உங்களுக்காகவே சேவையாற்றுகின்றனர் .வெளிநாடுகளில் இருந்து வந்த உதவிகள் சகல பிரதேச செயலகங்களுக்கும் இப்போதுதான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .அவர்கள் உங்களுக்கு பகிர்ந்து தருவார்கள். அவ்வாறு செயல்படாத அரச அதிகாரிகள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதுவரையில் அமைதியாக இருங்கள்” என கூறி பொதுமக்களை சமாதானப்படுத்த முற்பட்டார் .
இதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் அவ்விடத்தில் இருந்து வெளியேற முற்பட்டபோது வெருகல் பிரதேச செயலகத்தின் இரண்டு நுழைவாயில்களையும் பொதுமக்கள் மறித்து பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யாது இவ்விடத்தில் இருந்து வெளியேற முடியாது என தடுத்தனர் .
பின்னர் இது விடயத்தில் ஆராய்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அ . அச்சுதன்

23 minute ago
26 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
29 minute ago