2025 மே 01, வியாழக்கிழமை

பிளாஸ்டிக் பாவனைக்கு எதிராக விழிப்பூட்டல்

Editorial   / 2025 மார்ச் 11 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன்

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனைக்கு எதிராக விழிப்பூட்டும் வேலைத் திட்டம் காத்தான்குடியில் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகளால்  செவ்வாய்க்கிழமை (11) மேற் கொள்ளப்பட்டது 

கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.உதயராஜன் தலைமையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்தனர்.

40 பேர் கொண்ட அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து ஹோட்டல்கள், பல சரக்கு கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு சென்று அங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விழிப்புணர்வை மேற் கொண்டு தடை செய்யப்பட்ட பொலித்தீன் பிளாஸ்டிக் பாவனைக்கு எதிராக விழிப்பூட்டும் துண்டுப் பிரசுரத்தையும் விநியோகம் செய்தனர்.

இதன் போது 45 வர்த்தக நிலையங்களுக்கு அதிகாரிகள் சென்று சோதனை செய்ததுடன் விழிப்புணர்வையும் மேற் கொண்டதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.உதயராஜன் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .