Janu / 2025 நவம்பர் 03 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் மஸ்ஹர் வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(2) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 1000 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 750 மில்லி கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருளுடன் கைதான குறித்த சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்

10 minute ago
43 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago
45 minute ago
1 hours ago