Janu / 2025 நவம்பர் 16 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் வைத்திருந்த மூவர் சனிக்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.அசங்க தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவுப்பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது, 39, 42 ,49 வயதுடைய பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை மற்றும் நாவலடி பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயம் வீதியில் வைத்து கைதான 39 வயது சந்தேக நபரிடமிருந்து 110 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், வாழைச்சேனை ஹைறாத் வீதியில் வைத்து கைதான 42 வயது சந்தேக நபரிடமிருந்து 35 மில்லி கிராம் ஹெரோயினும் ஜிம் சென்டர் வீதி, நாவலடியில் வைத்து கைதான 49 வயதான சந்தேக நபரிடமிருந்து 4,790 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாக போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago