R.Tharaniya / 2025 மே 20 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ், கேரளா கஞ்சா,சிகரெட் மற்றும் பெருமளவிலான கசப்பு போதைப்பொருளுடன்42 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார் .
57லீற்றர் கசிப்புடன் 25 பேரும், ஐஸ் போதை பொருளுடன் நால்வரும், கேரளா கஞ்சாவுடன் எட்டு பேரும் சிகரெட்டுடன் ஒருவரும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வருடன் மொத்தமாக 42 பேர் பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட கர்பலா, கல்லடி, புதிய காத்தான்குடி,தாழங்குடா, கிரான் குளம் உட்பட பல பிரதேசங்களில் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் செவ்வாய்க்கிழமை (20) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


ரீ.எல்.ஜவ்பர்கான்
6 minute ago
11 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
48 minute ago