R.Tharaniya / 2025 மே 28 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
2788 மில்லிகிராம் ஐஸ் போதை பொருள்களுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ .எம். எஸ் .ஏ. ரஹீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் ஆர் டி எஸ் வீதியில் வைத்து 30 மற்றும் 35 வயதுடைய இரு போதை வியாபாரிகளையும் செவ்வாய்க்கிழமை (27) மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதுடைய நபரிடமிருந்து 1228 மில்லி கிராம் மற்றும் 35 வயது உடைய நபரிடமிருந்து 1560 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன .
கைது செய்யப்பட்ட நபர்கள் புதன்கிழமை (28) அன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
8 minute ago
13 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
50 minute ago