Janu / 2023 ஜூன் 05 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஸாகிர்
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் பல நாட்களாகத் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் விற்பனையாளர் (05) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சாய்ந்தமருது பொலிஸாருக்கு பிரதேச மக்களால் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து வொலிவேரியன் கிராமத்தில் வசிக்கும் 37 வயதுடையவரும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான சந்தேக நபரே சாய்ந்தமருது பொலிஸ் நிலைய போதை ஒழிப்புப் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.எல்.எம். புத்திக வழிகாட்டலிலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம். சம்சுதீன் அனுசரணையுடன் போதை ஒழிப்பு குற்றத் தடுப்புப் பிரிவு உதவி பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.எல்.எம். ரவூப் தலைமையிலான குழுவினால் மேற்படி சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபரைத் பொலிஸார் தேடி வந்த நிலையில், சந்தேக நபரைப் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025