R.Tharaniya / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப் பொருளுடன் ஈடுபட்டு வியாபாரியான கருவப்பங்கேணி யைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு மூன்று வாரத்தில் அதே பகுதியில் வைத்து 21 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரின் தந்தையை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (22) அன்று அனுமதியளித்துள்ளது.
பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு ஜெயசிங்கவின் கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் கான்ஸ்டபிள் சமரபந்து தலைமையில் ஜயசிங்க, ரதன் உட்பட்ட குழுவினர் சம்பவ தினமா ஞாயிற்றுக்கிழமை (21) இரவு நகர் பகுதியில் உள்ள கண்ணகை அம்மன் கோயில் வீதியில் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது பை ஒன்றுடன் நடந்து வந்த குறித்த நபரை, கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிஸார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர் இதன் போது வியாபாரத்துக்காக எடுத்துச் செல்லப்பட்ட 21 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய அவர் எனவும் இவரின் 22 வயதுடைய மகன் மற்றும் லயன்ஸ் கிளப் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவரை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் அதே பகுதியில் கைது குறித்த இளைஞரின் தந்தையாரை கைது செய்த பொலிஸார் அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

கனகராசா சரவணன்
1 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago