Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றி அதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்கள் உயிர்தப்பியதுடன் தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலமணிநேரத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் கடைத்தொகுதிமுற்றாக தீயில் எரிந்து சாம்பலாகிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.00 மணிக்கு இடம்பெற்றதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இது பற்றி தெரிய வருவதாவது,குறித்த உணவகம் வழமை போல சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை (12) அன்று இரவு9.00 மணிக்கு மூடியதுடன் அங்கு வேலை செய்துவரும் 7 இளைஞர்களும் உணவகத்தில் நித்திரைக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் உணவகத்தில் இருக்கும் மின்சார பிரதான சுவிஸ் இருந்து மின்ஒழுக்கு சுமார் இரவு10.30 மணியளவில் தீப்பற்றி எரிவதை அங்கு நித்திரைக்குச் சென்ற ஒருவர் கண்டு கொண்ட நிலையில் தீ பிரகாசமாக எரியத் தொடங்கியதை அடுத்து அங்கு நித்திரையில் இருந்த 6 பேரையும் எழுப்பிக் கொண்டு கடையின் கதவை உடைத்து கொண்டு வெளியேறினர்.
அவர்கள் அங்கிருந்து வெளியேறி 5 நிமிடத்தில் கடைத்தொகுதியில் பாரிய தீ ஏற்பட்டு பெரும் தீச்சுவாலை அடுத்து அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் பெரும் பதற்றம் அடைந்தனர்.
இதையடுத்து மாநகரசபையின் தீயணைப்பு படை மற்றும் பொலிஸாரின் தீயணைப்புப் பிரிவினர், காத்தான்குடி நகரசபை தீயணைப்புப் படை இணைந்து நள்ளிரவு 12.30 மணிக்கு பல போராட்டத்தின் மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் கடைதொகுதி முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது.
இந்த தீ விபத்து மின் ஒழுக்கு காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதே வேளை சம்பவ இடத்துக்கு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதிமுதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், மாநகரசபைஉறுப்பினர்களான மதன்,பிரதி,ஜனகன்,தரண் ஆகியோர் வருகை தந்து தீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஈடுபட்டனர்.இது தொடர்பான விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எம் எஸ் எம் நூர்தீன்
7 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
3 hours ago