2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு வாவி பெருக்கெடுப்பு போக்குவரத்து பாதிப்பு

R.Tharaniya   / 2025 நவம்பர் 18 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் உயர்ந்து வாவி பெருக்கெடுத்துள்ளது. 

மட்டக்களப்பு வாவி பெருக்கெடுத்ததன் காரணமாக வாவியின் அருகிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து செய்வதில் வாகன சாரதிகளும் ,பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் 

மட்டக்களப்பு நகரப் பிரதேசங்களிலும் வாவி பெருக்கெடுப்பு காரணமாக குறித்த பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன 

இதேவேளை மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் திங்கட்கிழமை(17) அன்று மாலை வெட்டப்பட்டு மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் தேங்கியுள்ள வெள்ள  நீர் குறித்த ஆற்றுவாயூடாக  கடலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது .

ரீ. எல் ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X