R.Tharaniya / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள வாகனேரி 125 வது மையில் கல் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த இரு கைக்குண்டுகளை ஞாயிற்றுக்கிழமை (26) அன்று பிற்பகல் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை அரச புலனாய்வு துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய விசேட அதிரடிப்படையினரிடம் அரச புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (26) அன்று பிற்பகல்2.50 மணியளவில் குறித்த இடத்தில் கைவிடப்பட்ட இரு கைக்குண்டுகளை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டுகளை நீதிமன்ற உத்தரவை பெற்று திங்கட்கிழமை (27) அன்று வெடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்
10 minute ago
43 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago
45 minute ago
1 hours ago