R.Tharaniya / 2025 ஜூலை 07 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு -பதுளை பிரதான வீதியில் உறுகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஏழு வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (06) அன்று இடம் பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
உறுகாமம் பிரதேசதைச்சேர்ந்த புவனேஸ்வரன் கபிஷேக் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் தாயார் பஸ் வண்டியிலிருந்து மகனை கீழே இறக்கி விட்டு மகளை இறக்குவதற்காக மீண்டும் பஸ் வண்டிக்குள் ஏறும் போது குறித்த சிறுவன் அந்த பஸ் வண்டியின் முன்புறமாக வீதியைக் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் அதே வழியில் வேகமாக வந்த தனியார் பஸ் வண்டி சிறுவனை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த சிறுவனை கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சிறுவனின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி எம் எஸ் எம். நசிர் அங்கு முதல் கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

36 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
8 hours ago
9 hours ago