2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

மட்டு.யானை தாக்கியதில் ஒருவர் பலி

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஏரளக்குளம் பகுதியில் உள்ள வயலுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மீது யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) அன்று பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஏரளக்குளம் கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்ல ரெத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விவசாயி சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (14) அன்று பிற்பகல் 11.00 மணிக்கு வயலில் இருந்து வெளியேறி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அவர் மீது யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது வீதியில் உயிரிழந்துள்ளதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .