2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

மின்னல் தாக்கத்தினால் மின்சாரம் துண்டிப்பு

Janu   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடி மின்னல் தாக்கத்தினால்  காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள மின் மாற்றி செயலிழந்ததால் அப்பகுதியிலுள்ள 200 வீடுகளுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (17) மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் காத்தான்குடி கடற்கரை வீதி ஆதார வைத்தியசாலக்கு முன்பாக உள்ள  மின் மாற்றி செயலிழந்ததால் அந்தப் பகுதியிலுள்ள 200வீடுகளுக்கு மேல் மின்சாரம்  துண்டிக்கப்பட்டது 

இதனால் புதிய காத்தான்குடி  அன்வர் பகுதி விடுதி வீதி மற்றும் கடற்கரை வீதியின் ஒரு பகுதி ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து திங்கட்கிழமை (18)  காலை அங்கு சென்ற மட்டக்களப்பு கல்லடியிலுள்ள மின்சார சபை ஊழியர்கள் மின்மாற்றியை  மாற்றி புதிய மின் மாற்றியினை பொருத்தி விரைவாக மின் இணைப்பை வழங்கினர்.

எம் எஸ் எம் நூர்தீன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .