2025 நவம்பர் 19, புதன்கிழமை

மாணவனை தாக்கியவர் கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 03 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (3) இடம்பெற்றுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலை ஒன்றில் முதலாம் தரத்திலும் ஐந்தாம் தரத்திலும் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு மத்தியில் சிறு சிறுவர் முரண்பாடு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதை அவதானித்துக் கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் தந்தை ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனுக்கு கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளான மாணவன் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துடன், தாக்கிய நபரை வாழைச்சேனை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X