R.Tharaniya / 2025 மே 19 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) அன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நண்பர்களுடன் சேர்ந்து சந்தியாற்று நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு மரணமடைந்தவர் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வரும் ஓட்டமாவடி பி.எஸ்.குறுக்கு வீதியில் வசித்து வரும் முகம்மது அலி கான் அஸ்லூன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
6 minute ago
11 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
48 minute ago