Editorial / 2025 நவம்பர் 21 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் வெள்ளிக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதூர் பச்சநூர் பகுதியில் வைத்து ஒருவரிடமிருந்து 52,500 மில்லி லீற்றரும், மற்றவரிடமிருந்து 45,000 மில்லி லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.அத்தோடு கசிப்பு கொண்டு செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 46, 42 வயதுகளை உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
சில வாரங்களுக்கு முன்னர் கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.அவரைக் கைது செய்ய பொலிஸார் சென்ற போது அவர் தப்பி ஓடி ஆற்றில் குதித்ததை அடுத்து நீரில் மூழ்கி மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
53 minute ago
58 minute ago