2024 மே 18, சனிக்கிழமை

லொறி தீப்பற்றியதில் பொருட்கள் சேதம்

Janu   / 2024 மே 15 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை நாவலடி பகுதில் வைத்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ள  சம்பவம்  புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது .

கொழும்பில்  இருந்து  பொருட்களை ஏற்றிக் கொண்டு காத்தான்குடியை நோக்கி செவ்வாய்கிழமை (13)  இரவு பிரயாணித்த லொறியில் இருந்த பொருட்கள்  புதன்கிழமை (15) அதிகாலை 4.00 மணியளவில்  நாவலடி பகுதியில் வைத்து   திடீரென தீபற்றிக் கொண்டுள்ளது .

அதனையடுத்து ,லொறியை நிறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர் .

இதில் எடுத்துச் சென்ற பொருடகள் எரிந்து சேதமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .