R.Tharaniya / 2025 நவம்பர் 16 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் வட கீழ் பருவ காற்று மழை வீழ்ச்சி அதிகமாக கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுமாக இருந்தால் முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. எம்.றியாஸ் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று தெரிவித்தார்.
வடகீழ் பருவ பெயர்ச்சி மழை ஆரம்பிக்கின்ற சூழலில் க.பொ.த உயர் தரப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இக் காலத்தில் அடிக்கடி தாழமுக்கம் உருவாகி பலத்த மழை மற்றும் காற்று வீசக் கூடிய பகுதியாகையால் பரீட்சை நிலையத்திற்கான போக்குவரத்திற்கு பரீட்சை நிலையம் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்படும் உதவுவதற்கு தயாராக அனர்த்த தயார்படுத்தல் திட்டம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெறும் காலங்களில் தங்களது நிறுவனங்களில் செயற்படுத்தக் கூடிய அனைத்து பதில் நடவடிக்கைகளையும் தடையின்றி மேற்கொள்வதற்கான தயார்படுத்தல் திட்டங்களை செய்வதன் மூலம் அனர்த்த இழப்புகளை குறைப்பதுடன் பரீட்சையினை சுமூகமாக முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரமவின் ஆலோசனைக்கமைய கல்வித் திணைக்கள அதிகாரிகள் பொலிஸார், இராணுவத்தினர், உள்ளூராட்சி மன்றங்கள்,வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை போக்கு வரத்து சபை தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய க.பொ.த உயர் தரப் பரீட்சை காலத்தில் அனர்த்த முன்னாயத்தம் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுமாறும், இது தொடர்பான மேலதிக தகவல்களை 0773957883, 0632222218, 0632117117 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
எம்.எஸ்.எம்.ஹனீபா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .